சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி 01/09/24 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணிக்கு சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறும்.
எழுத்தாளர் மலையரசியின் ‘முகிழ்’ சிறுகதைத் தொகுப்பினை திரு உமாசங்கர் நாராயணன் அறிமுகம் செய்து பேசுவார். கலந்துரையாடல் அங்கத்தில் திருவாட்டி தமிழ்ச்செல்வி இராஜராஜன் நூல் குறித்து எழுத்தாளர் மலையரசியுடன் கலந்துரையாடுவார்.
கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் இளையர் பிரிவு உறுப்பினரான செல்வி யாழினி கமலக்கண்ணன் நிகழ்ச்சியை நெறிப்படுத்துவார்.
அக்டோபர் மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் உண்டு.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் அக்டோபர் மாதச் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:
உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: “ஊன்றுகோல் இல்லாமல் என்னால் நடக்க முடிகிறதே” மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
இளையர் பிரிவு: தன்னாலும் திருப்பிக் கொடுக்க முடியும் என்று அவன்/அவள் புரிந்துகொள்ள பத்து ஆண்டுகள் ஆகின. 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
பொதுப்பிரிவு: முதியவரின் பணம், சில நிமிட இடைவெளியில் வெவ்வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றப்படுவது வங்கி அதிகாரியின் கவனத்திற்கு வந்தது. 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 27/09/2024 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும்.
மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/ பிரதீபா வீரபாண்டியன் - 81420220/ பிரேமா மகாலிங்கம் - 91696996

