திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி: நிர்மல் குமார்

திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி: நிர்மல் குமார்

படம்: தினமணி

28 Jun 2026 - 5:14 pm

1 mins read

சென்னை: அதிமுகவும் திமுகவும் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க, அக்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க நாள்தோறும் முயற்சி செய்து வருகின்றனர்,” என்று கூறியுள்ளார்.

“ஒவ்வொரு நாளும் மு.க. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதற்காகவே ஓர் அணி அமைத்து நாள்தோறும் வேலைசெய்து வருகின்றனர்,” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக மக்கள் விஜய் முதல்வராக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அதனை எதிர்த்து, குறுக்கு வழியில் யாரையேனும் விலைக்கு வாங்க முடியுமா என மு.க. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் சேர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அதிமுக, திமுகவின் கூட்டு முயற்சியின் வெளிப்பாடே, ஒவ்வொருவரும் அவர்களின் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான முக்கியக் காரணம். ஒவ்வொரு கட்சியையும் உடைப்பதற்கான வேலைகளையே அவர்கள் செய்து வருகின்றனர்.

எல்லாரையும் மிரட்டும் வகையிலும், பணத்தைக் கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பலரை விலைக்கு வாங்கும் வேலையைத்தான் இவர்கள் செய்து வருகின்றனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் அதற்கு உடன்படவில்லை. திமுக சட்ட மன்ற உறுப்பினர்களில் பலர் அக்கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் விலகினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று அமைச்சர் நிர்மல் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்