தோல்வி பயத்தால் ரவுடித்தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது திமுக: சி.டி.நிர்மல்குமார்

தோல்வி பயத்தால் ரவுடித்தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது திமுக: சி.டி.நிர்மல்குமார்

1 mins read
45668735-b08f-444f-8e54-a29df060e1ad
சி.டி.நிர்மல்குமா. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், தோல்வி பயத்தால் திமுகவினர் வழக்கம்போல் ரவுடித்தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக தவெக இணைச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்த்து அலை அலையாக வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் தவெகவினர் தாக்கப்பட்டுள்ளதாகவும் திருச்சி கிழக்குத் தொகுதியில் இரவு ஒரு மணி வரை கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லா இடங்களிலும் அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியோடு திமுகவினருக்கு துணைபோகின்றனர் என்றும் தவெக அளித்த புகார்கள் தொடர்பாக இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் திரு நிர்மல்குமார் குற்றஞ்சாட்டினார்.

“பேருந்து வசதி வேண்டுமென்றே தடை செய்யப்பட்டது. முக்கியமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. 20 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

“ஸ்டாலினும் உதயநிதியும் செய்யும் ஒரே பெரிய வேலை தேர்தல் பிரசாரம் செய்வதுதான். இனிமேல் அவர்களுக்கு முழு ஓய்வுதான். தீயசக்தியான திமுகவை எதிர்த்துதான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

“தமிழகத்தில் களத்திலேயே இல்லாத பாஜகவைப் பற்றி எதற்குப் பேச வேண்டும். மக்களே புறக்கணித்த கட்சி பாஜக. பேச வேண்டிய இடத்தில் நிச்சயம் பேசுவோம்,” என்றார் நிர்மல்குமார்.

குறிப்புச் சொற்கள்