தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய் கட்சிக்குத் தாவிய திமுக, நாம் தமிழர் கட்சியினர்

1 mins read
d08288a1-80ea-4581-866f-93caec5b5f22
நாகை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்த பிற கட்சியினர். - படம்: தமிழக ஊடகம்

நாகப்பட்டினம்: திமுக, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர்.

பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நாகையில் நடைபெற்றது. அப்போது, நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்லூரைச் சேர்ந்த திமுக தொண்டர்கள், பொய்கை நல்லூர் மற்றும் செல்லூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பலர் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி, தவெகவில் இணைந்தனர்.

தவெகவுடன் தங்களை இணைத்துக்கொண்ட பிற கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் இளையர்களுக்கு நாகை மாவட்ட தவெக செயலாளர் சுகுமாரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

குறிப்புச் சொற்கள்