அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த திமுக வியூகம்

அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த திமுக வியூகம்

2 mins read
3472740c-7966-4a0a-8303-2b268ffe9713
சீமானை வைத்து திமுக வியூகம் வகுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. - கோப்புப் படம்: த இந்து

சென்னை: அம்​பாச​முத்​திரம் தொகு​தி இடைத்தேர்தலில் ‘விசில்’ தவெகவை எதிர்​கொள்வதற்காக ‘நாம் தமிழர் கட்​சி’​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளரான சீமானை எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து திமுக வியூகம் வகுத்து வருவதாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

சட்​டப்​பேரவை தேர்​தலில் தனித்து களம் கண்ட சீமானின் ‘நாம் தமிழர் கட்​சி’, அனைத்து இடங்​களி​லும் தோல்​வியைச் சந்​தித்​தது. அதன் வாக்கு வங்​கி​யும் 8லிருந்து 4 விழுக்காட்டுக்குச் சரிந்தது. காரைக்​குடி​யில் போட்​டி​யிட்ட அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளரான சீமானும் வைப்புத் தொகையை இழந்து நான்​காம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார்.

இந்த நிலையில், இரு தொகு​தி​களில் வென்ற முதல்​வர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதி பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனால் திருச்சி கிழக்​கு, பெருந்​துறை, தாராபுரம், மது​ராந்​தகம், அம்​பாச​முத்​திரம், விராலிமலை ஆகிய 6 தொகு​தி​களுக்கு தற்​போது இடைத்​தேர்​தல் அறிவிக்​கப்​படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்​தேர்​தலில் தவெக கூட்​ட​ணியை வீழ்த்​தியே தீர வேண்​டும் என்ற முனைப்​பில் இருக்​கும் திமுக, ஆளுங்​கட்​சிக்கு எதி​ராக அனைத்து எதிர்க்​கட்​சிகளை​யும் ஒன்​றிணைத்து பொதுவேட்​பாளர்​களை நிறுத்த ஆலோ​சித்து வரு​வதாக ‘இந்து தமிழ் திசை’ தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் முதல்​கட்​ட​மாக நெல்லை மாவட்​டத்​தின் அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் பணி​களை அக்கட்சி தொடங்​கி​யுள்​ளது. கடந்த தேர்​தலில் அம்​பாச​முத்​திரத்​தில் அதி​முக சார்​பில் வென்ற இசக்கி சுப்​பை​யா, இரண்​டாம் இடம்பிடித்த காங்​கிரஸ் வேட்​பாளர் மற்​றும் மூன்​றாம் இடம்​பிடித்த தவெக வேட்​பாளர் என மூவருமே தற்​போது தவெக அணி​யில் உள்​ளனர்.

இத்​தொகு​தி​யில் நாடார் சமூகத்​தினர் கணிச​மாக வசிப்​ப​தைக் கணக்​கில் கொண்​டு, அதே சமூகத்​தைச் சேர்ந்த சீமானை பொது​வேட்​பாள​ராக நிறுத்த திமுக காய் நகர்த்துகிறது.

சீமானை சம்​ம​திக்க வைக்​கும் பொறுப்பு முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாகத் தெரிகிறது.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யிட​மும் திரைமறைவு பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வரு​வ​தாக​வும் தகவல்​கள் கசிந்​துள்​ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அம்​பாச​முத்​திரத்​தில் சீமானை வெற்றி பெறச்​செய்து சட்​டப்​பேர​வைக்​குள் அனுப்​பி​னால், அது முதல்​வர் விஜய்க்​கும் தவெக​வுக்​கும் சட்​டசபையில் கடுமை​யான அரசி​யல் நெருக்​கடியை கொடுக்​கும் எனவும் சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சிகளின் குரல் மேலும் வலுப்​பெறும் எனவும் திமுக கணக்குப் போடு​வ​தாகக் கூறப்​படு​கிறது. ஆனால் இதனை திமுக உறுதிப்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்