தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேடிக்கை பார்க்கவோ படமெடுக்கவோ கூடாது: காவல்துறை உத்தரவு

1 mins read
c0848445-d6c3-4034-a7f9-344101353adb
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றின் நடுவில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலும் அருகில் உள்ள கோவில்களும் நீரில் மூழ்கின. - படம்: தமிழக ஊடகம்

தாமிரபரணி என அழைக்கப்படும் தாமிரவருணி ஆற்றில் நின்று தற்படம் (செல்ஃபி) எடுக்கவோ வேடிக்கை பார்க்கவோ வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை காண்பதற்காக, சுலக்சனா முதலியார் மேம்பாலத்தில் நின்று ஏராளமான பொதுமக்கள் செல்ஃபி எடுப்பதுடன், வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வரவேண்டாம் என்றும் ஆற்றங்கரையோரம் நின்று செல்ஃபி எடுக்கவோ புகைப்படம் எடுக்கவோ கூடாது என்றும் ஆற்றங்கரையோரம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்