தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புனை​வு​கள் வரலாறு ஆகாது: இந்திய தொல்லியல் துறை இயக்​குநர் அமர்நாத்

1 mins read
eec11caa-b4f2-433c-ae4c-6d4e1d9df006
தமிழகம் முழு​வதும் கிடைத்த கறுப்பு சிவப்பு நிறப் பானை ஓடு காஞ்​சிபுரத்​தில் மட்​டும் கிடைக்​காததற்கு காரணம் காஞ்​சிபுரம் சங்க கால நகரம் கிடை​யாது என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார். - படம்: தமிழக ஊடகம்

மதுரை: புனைவு வரலாற்றைத் தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும் என்று இந்தியத் தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணா கூறி​யுள்ளார்.

வரலாற்றை புனை​வு​களோடு கட்​டமைக்​கலாம். அதைத் தொல்​லியல் சான்​றாகக் கட்​டமைக்க முடி​யாது. புனை​வு​கள் வரலாறு ஆகாது. தமிழகத்​தின் பல அகழாய்​வு​ குறிப்​பு​கள் மக்​களுக்குச் சென்று சேர்ந்​தால்​தான் வரலாற்​றின் உண்​மைத்​தன்மை புரி​யும் என்று அவர் கூறினார்.

தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தாளர் கலைஞர்​கள் சங்​கம் (தமுஎகச) சார்​பில் மதுரையில் சனிக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற சிந்​து​வெளி நாகரி​கம் உலகுக்கு அறிவிக்​கப்​பட்ட நூற்​றாண்டு நிறைவுக் கருத்​தரங்​கத்தில் அவர் பேசினார்.

“தற்​போது நாகரி​கம் பற்​றிய புனை​வுக் கதைகளைத்​தான் வரலாறாகப் பார்த்​துக்கொண்​டிருக்​கிறோம். ஆதா​ரங்​கள் அடிப்​படை​யில் கட்​டமைக்​கப்​படு​வது​தான் வரலாறு.

“கீழடி அகழாய்வு குறித்து இன்​னும் முழு அறிக்​கை அளிக்​கப்படவில்லை. அதற்​குள் அண்ணா பல்​கலைக்​கழக மாணவர்​கள் மணலூர் கீழடியை மகா​பாரதத்துடன் தொடர்​புபடுத்தி புனைவு நூலாக்​கி​யுள்​ளனர்,” என்றார் அவர்.

“காஞ்​சிபுரத்​தில் சென்னை பல்​கலைக்​கழக மாணவர்​கள் 1975-82-ம் ஆண்டுவரை 7 ஆண்​டு​கள் அகழாய்வு செய்த அறிக்​கையை இன்​னும் முழு​மை​யாக வெளி​யிட​வில்​லை. தமிழகம் முழு​வதும் கிடைத்த கறுப்பு சிவப்பு நிற பானை ஓடு காஞ்​சிபுரத்​தில் மட்​டும் கிடைக்​காதது முக்​கிய செய்​தி. அதற்குக் காரணம் காஞ்​சிபுரம் சங்க கால நகரம் கிடை​யாது. மக்​களுக்கு தெரியப்​படுத்​தி​யத்தால்​தான் கீழடி வாழ்ந்து கொண்​டிருக்​கிறது. காஞ்​சிபுரம் பற்​றிய அறிக்கை வந்​திருந்​தால் வரலாற்றுப் பார்வை மாறி​யிருக்​கும். மொழியைக் காப்பாற்​றி வாழ்​பவர்​கள் தமிழர்​கள். இன்றுவரை சங்க இலக்​கி​யங்​களை தொல்​லியல் எச்சங்​களோடு ஒப்​பிட​வில்​லை,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்