சென்னையில் நாள்தோறும் 400 தெருநாய்களுக்குக் கருத்தடை: அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்து

சென்னையில் நாள்தோறும் 400 தெருநாய்களுக்குக் கருத்தடை: அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்து

1 mins read
7a21f542-e163-4c0d-bb11-9bb11ae2ea54
சென்னையில் பத்து இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் 400க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்குக் கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் வெறிநாய்க்கடித் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மூலம் இதுவரை 1.68 லட்சம் தெருநாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என்றும் நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.

சென்னையில் 71,388 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடித் தடுப்பூசிச் செலுத்தி, நுண் சில்லு (மைக்ரோசிப்) பொருத்தப்பட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகத் திரு ககன்தீப்சிங் பேடி கூறினார்.

சென்னையில் பத்து இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், நோயால் பாதிக்கப்பட்ட 250 நாய்களுக்குக் காப்பகம் அமைக்கும் பணி நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்துத் தெருநாய்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசிச் செலுத்தி நூறு விழுக்காடு என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் திரு ககன்தீப் சிங் பேடி மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்