விஜய்க்கு ஆதரவு குறித்து சனிக்கிழமை சொல்வேன்: திருமாவளவன்

விஜய்க்கு ஆதரவு குறித்து சனிக்கிழமை சொல்வேன்: திருமாவளவன்

படம்: தினமணி

08 May 2026 - 7:18 pm

1 mins read

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆதரவு அளிக்கிறதா என்பதை சனிக்கிழமை (மே 9) அறிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (மே 8) நடக்கவுள்ள இணையவழி கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் அண்மைய அரசியல் நெருக்கடி குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

“கட்சித் தலைவர் என்கிற முறையில் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், நிர்வாகிகளின் கருத்துகளை அறிய வேண்டியது, அவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டியது எனது பொறுப்பு, கடமை. உயர்நிலைக்குழு கூட்டத்துக்குப் பின்னர் எங்களது முடிவை முறைப்படி அறிவிப்போம்,” என்றார் அவர்.

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க இடையூறாக இருக்கமாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதை திருமாவளவன் சுட்டினார்.

தவெகவுக்கு விசிக ஆதரவளித்தால் அதற்கு திமுக தலைவர் இடையூறு தராமல் இருப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நாங்கள் இன்னும் எங்கள் நிலைப்பாட்டை முடிவுசெய்யாதபோது, இப்படிக் கேட்பது சரியல்ல,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்