‘எஸ்ஐஆர்’-ஐ எதிர்த்தால் இரட்டை இலை பறிபோகும்: உதயநிதி

2 mins read
a3222b7c-2c06-480f-9ed1-339d57c0fbfb
திமுக நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: ‘எஸ்ஐஆர்’ என்னும் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிரத் திருத்​தத்தை எதிர்த்​தால் இரட்டை இலையை பறிபோய்விடும் என்று அதி​முகவின் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் எனத் திமுக நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​தார்.

வேலூர் மாவட்​டம் காட்​பாடி அடுத்த சேவூரில் திமுக நிர்​வாகி​கள் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் திமுக இளைஞரணி செய​லா​ள​ரும், துணை முதல்​வ​ரு​மான உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் திட்டம் சரியில்லாத திட்டம் என்றார்.

வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​தத்​துக்கு அனை​வ​ரும் எதிர்ப்பு தெரி​விக்கும்போது, நாங்​கள் பாஜகவை ஆதரிப்​போம் என்று கூறும் ஒரே இயக்​கம் அதி​முக தான்.

இது தமிழ்​நாட்​டு மக்களுக்குச் செய்​யும் மிகப்​பெரிய துரோகம். இதை எல்​லாம் மக்​களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

பழனி​சாமிக்கு தெரிந்​ததெல்​லாம் ஒன்​று, காலில் விழு​வது, இன்​னொன்​று, அடுத்​தவர் காலை வாரி விடு​வது. தமிழ்​நாட்டை காப்​பாற்​றப் போவ​தாகச் சொல்லி பேருந்தை எடுத்​துக்​கொண்டு புறப்​பட்​ட​போதே சொன்​னேன்​.

போகப்​போக ஒவ்​வொரு​வ​ராக இறங்​கி​விடு​வார்​கள். கடைசி​யில் நீங்​களும் ஓட்டுந​ரும்​தான் இருப்​பீர்​கள் என்​று. அது​தான் இன்றைக்கு நடக்​கிறது. ஒரு நாள், பழனி​சாமியை நீக்​கி ​விட்​ட​தாக அவரே அறிக்கை விடலாம்.

அதி​முக-வை கரகாட்​டக்காரன் கார் போல ஆக்கிவிட்டார் பழனிசாமி. ஆக்சிடென்ட் ஆன கார் மாதிரித்தான் இன்றைக்கு அதிமுக நிலைமை உள்ளது.

சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை எல்லாம் திமுகவின் பி டீம் எனச் சொல்லி​விட்டார் பழனிசாமி. நான் சொல்கிறேன், தொண்டர்​களாகிய நீங்கள் இருக்கும் வரை திமுக-வுக்கு பி டீமும் தேவையில்லை, சி டீமும் தேவையில்லை” என்று கூறியுள்ளார் திமுக இளைஞரணி செய​லா​ள​ருமான உதயநிதி ஸ்டாலின்.

பிரதமர் நரேந்திர மோடி, பீகார் தேர்​தல் பிர​சா​ரத்​தில் சம்​பந்​தமே இல்​லாமல் தமிழ்​நாட்​டைப் பற்றிப் பேசுகி​றார். தமிழ்​நாட்​டில் பீகார் மக்​களுக்குப் பாது​காப்பு இல்​லை; அங்கே அவர்​களைத் துன்​புறுத்துகிறார்​கள் என்று பேசுகி​றார். தான் இந்​திய ஒன்​றி​யத்​துக்கே பிரதமர் என்​பதை மறந்து மக்​களுக்​குள், மாநிலங்​களுக்​குள் சண்​டையை மூட்​டி​விட முயற்​சிக்​கி​றார்.

இப்​படித்​தான் ஒடிசா தேர்​தலின்போது, கோயில் சாவியைத் திருடி​விட்டு தமிழ்​நாட்​டுக்கு வந்து ​விட்​டனர் என்று சொன்​னார்.

பிரதமரின் இத்​தகைய வெறுப்​புப் பேச்​சுக்கு முதல்​வர் கண்​டனம் தெரி​வித்​தார். இதற்​குக்​கூட கண்​டனம் தெரிவிக்​காமல் எதிர்க்​கட்சித் தலை​வர் எடப்​பாடி பழனி​சாமி இருக்​கி​றார்.

முன்னதாக, செங்கோட்டையன் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை விரைவில் நடத்தப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது உண்மையான அ.தி.மு.க. இல்லை. அ.தி.மு.க.வின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க அவகாசம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்