இஸ்ரோ: அதிக செயற்கைக் கோள்களால் துல்லியமான வானிலைத் தகவல்கள்

இஸ்ரோ: அதிக செயற்கைக் கோள்களால் துல்லியமான வானிலைத் தகவல்கள்

2 mins read
292bbf39-e657-4706-80ac-a8c8c35932e6
இஸ்ரோ தலைவர் நாராயணன் - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திருநெல்வேலி: இந்தியா அதிகமான செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ள காரணத்தால்தான் வானிலை குறித்த துல்லியமான தகவல்களைப் பெற முடிகிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.

வானிலை குறித்த தகவல்களை முன்கூட்டியே துல்லியமாக அறிய முடிகிறது என்றால் அதற்கு விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள்தான் காரணம்.

இந்த செயற்கைக் கோள்கள் மூலம், மீனவர்கள் நாட்டின் எல்லையைக் கடந்து சென்று அண்டை நாட்டவரிடம் சிக்காமலிருக்கவும், மீன்கள் அதிகமாக உள்ள பகுதிகளை அறியவும் முடியும். இதுபோன்ற தகவல்களைப் பெறுவதற்கு ஏராளமான செயலிகளை உருவாக்கி அளித்துள்ளோம். அதன் மூலம் தமிழிலேயே தகவல்களைப் பெற முடியும் என்று கூறினார்.

ககன்​யான் திட்​டத்​துக்​காக 80 ஆயிரம் சோதனை​கள் நடை​பெற்​றுள்​ளன. இத்​திட்​டத்​தில் முதலில் 3 ஆளில்லா ஏவுகணைகளை விண்​ணுக்கு அனுப்பி சோதனை செய்த பின்​பே, ஆட்​களை விண்​ணுக்கு அனுப்​புவோம்.

உலக அளவில் விண்​வெளிக்கு ராக்​கெட்​டுகளை வணி​கப் பயன்​பாட்​டுக்கு பயன்​படுத்​து​வ​தில் இந்​தியா 2 விழுக்காட்டுப் பங்​களிப்பை கொண்​டுள்​ளது.

இதை 10 விழுக்காடாக உயர்த்​தும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறோம். தற்​போது, 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கை கோள்​களை எடுத்து செல்​லும் ஏவுகணைகளை வெற்​றிகர​மாக அனுப்பி உள்​ளோம். 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்​கைக்​கோளை அனுப்​புவதற்கு தேவை​யான ராக்​கெட்​டு​களைத் தயாரிக்க அனு​மதி கிடைத்​துள்​ளது.

அந்​தப் பணி​யும் நடை​பெறுகிறது.ககன்​யான் திட்​டத்​துக்​கு, 80 ஆயிரம் கிலோ செயற்கை கோளை சுமந்து செல்​லும் ராக்​கெட்டைத் தயாரிக்க வேண்​டும். அதற்​கான முயற்​சிகளும் நடை​பெற்று வரு​கின்​றன என்றார் விஞ்ஞானி நாராயணன்.

குறிப்புச் சொற்கள்