ஏப்ரல் இறுதியில் வெளியாகும் ஜனநாயகன்

ஏப்ரல் இறுதியில் வெளியாகும் ஜனநாயகன்

1 mins read
7465dcce-e841-46e1-a21d-4552bf15342f
கடந்த ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. - கோப்புப்படம்: நியூஸ் பைட்ஸ்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீடு என அப்படத்தின் தயாரிப்பாளர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும் ஏப்ரல் கடைசி வாரத்தில் படம் வெளியாகும் என்றும் படக்குழு கூறியுள்ளது.

அநேகமாக, எதிர்வரும் ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 30 ஆகிய தேதிகளில், ஏதாவது ஒரு தேதியை தயாரிப்புத்தரப்பு தேர்வு செய்யும் எனத் தெரிகிறது.

அதற்குள் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிடும் என்பதால் அரசியல் ரீதியில் ‘ஜனநாயகன்’ படத்துக்குச் சிக்கல்கள் ஏதும் ஏற்படாது என்று விஜய் தரப்பு கருதுவதாகக் கூறப்படும் நிலையில், பட வெளியீட்டை பெரிய அளவில் கொண்டாட விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் தயாராகி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்