மக்கள் சக்தியுடன் இணைந்து வெற்றி பெறுவோம்: நயினார் நாகேந்திரன்

மக்கள் சக்தியுடன் இணைந்து வெற்றி பெறுவோம்: நயினார் நாகேந்திரன்

2 mins read
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தீவிரப் பிரசாரம்
116e66b0-5eb4-4cb5-83ad-9eb64c3f09d2
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக சார்பில் களமிறங்கும் கிருஷ்ண முரளிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்தார். - படம்: எக்ஸ்/ நயினார் நாகேந்திரன்

தென்காசி: தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடையநல்லூர் வேட்பாளரை ஆதரித்து கடையநல்லூர் தொகுதியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.

இது குறித்து நயினார் நாகேந்திரன் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகக் களமிறங்கும் கிருஷ்ண முரளிக்கு ஆதரவாக, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குசேகரிப்புப் பணியில் ஈடுபட்டோம்.

“கூட்டத்தில் இருந்த மக்களின் முகங்களில் திமுக ஆட்சிக்கு எதிராக உள்ள அதிருப்தி தெளிவாகத் தெரிந்தது. கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பும் அவர்களின் பங்களிப்பும் நம் கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தத் தயாராக உள்ளது.

“வளர்ச்சியையும் மக்கள் நலனையும் நோக்கமாகக் கொண்ட நம் அணிக்கு, கடையநல்லூர் மக்களின் முழு ஆதரவு கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மக்கள் சக்தியுடன், நிச்சயமாகப் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி முன்னேறுவோம்,” என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சித் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்