தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாட்டில் மழை தொடரும் என முன்னுரைப்பு

1 mins read
fec64a1a-e544-4350-8df3-f03e73f3f2a4
சென்னையில் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இணையம்

சென்னை: இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன் விளைவாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (அக்டோபர் 22) விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23, 24 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தொடக்கமாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்