தமிழகத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு

1 mins read
b9d8ec18-7e44-45f6-8fe4-01727abfab9e
சென்னையில் 32 இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 பெண்கள் உட்பட 2,000பேர் கலந்து கொண்டனர்.  - படம்: இந்திய ஊடகம்

சென்னை: மும்மொழிக்கொள்கை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பேசும் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் போல நடந்து கொள்வதாகக் கூறியிருந்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் திங்கட்கிழமை (மார்ச் 10) மாலை தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உட்படத் தமிழ்நாடு முழுவதும் 125 இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. 

இதில் திமுக முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று தர்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களில் மாநிலம் முழுவதும் 11,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. 

சென்னையில் 32 இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 பெண்கள் உட்பட 2,000 பேர் கலந்து கொண்டனர். 

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சென்னையில் மட்டும் 25 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களிலும் திமுகவினர் மீது வழக்கு போடப்பட்டு இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்