சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமியை சாடியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியதைப்போல் அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதாகக் கூறினார் அமைச்சர் ரகுபதி. தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள், சமத்துவ சமூக மேம்பாட்டு செயல்திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாக அவர் சாடினார்.
குரலை உயர்த்தி கைகளைச் சுழற்றிப் பேசினால் மக்களை ஏய்த்து, தி.மு.க.வை வீழ்த்திவிடலாம் என்று திரு பழனிசாமி பகல் கனவு காண்பதாக திரு ரகுபதி தாக்கிப் பேசினார்.
“கத்திக் கத்திப் பேசினால் போதாது; உண்மையைப் பேசுங்கள்,” திரு ரகுபதி சாடினார்.