கைக்குழந்தையுடன் சட்டமன்றம் வந்த எம்எல்ஏ

கைக்குழந்தையுடன் சட்டமன்றம் வந்த எம்எல்ஏ

படம்: தினத்தந்தி

05 Aug 2026 - 4:50 pm

1 mins read

சென்னை: தமிழக வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரில் பங்கேற்க தவெக சட்டமன்ற உறுப்பினரான 36 வயது எம்.ஆர்.பல்லவி கைக்குழந்தையுடன் தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.

கட்சி தொடர்பான முக்கியக் கூட்டங்களுக்கு குழந்தையுடன் வருகை தரும் பல்லவி, வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு கைக்குழந்தையுடன் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பல்லவி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றவர். தேர்தல் பிரசாரத்தின்போது நிறைமாதமாக இருந்தபோதும் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். வெற்றி பெற்ற சில நாள்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

12ஆம் வகுப்புவரை படித்துள்ள பல்லவி, தமிழக வெற்றிக் கழகக் கட்சியை விஜய் தொடங்கிய சமயத்தில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுசட்டமன்றம்வரவுசெலவுத் திட்டம்வரவுசெலவுத் திட்டம் 2026விஜய்தவெக