தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராணுவ வீரர்கள் எளிதாகப் பயன்படுத்த நவீன சக்கர நாற்காலி: அறிமுகம் செய்தது சென்னை ஐஐடி

2 mins read
b84b11d0-987d-47da-8b55-90b0fdd1251b
ஐஐடி​யின் சக்கர நாற்​காலி ரூ.75 ஆயிரத்​துக்​கு கிடைக்​கும். - படபம்: ஊடகம்

சென்னை: இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை ஐஐடி மையத்தைச் சேர்ந்த குழுவினர், மாற்​றுத் திற​னாளி​கள் எளி​தாகப் பயன்​படுத்​தும் வகை​யில் நவீன சக்கர நாற்​காலியை உருவாக்கி உள்ளனர்.

மாற்​றுத் திற​னாளிகள், போரில் காயமடைந்து நடக்க முடி​யாத ராணுவத்​தினர் ஆகியோர் இந்த சக்கர நாற்காலியை எளிதில் பயன்படுத்த இயலும். சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழு​வினர் இதை வடிவ​மைத்​துள்​ளனர். ‘டிரிம்​பிள்’ என்ற பன்​னாட்டு நிறு​வனத்​தின் பங்​களிப்​புடன் இதற்​கான ஆராய்ச்சி பணி மேற்​கொள்​ளப்​பட்​டது.

‘ஒய் டி ஒன்’ எனக் குறிப்பிடப்படும் இந்த நவீன சக்கர நாற்காலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்​திய ராணுவ மருத்​துவப் பணி​கள் தலைமை இயக்​குநர் வைஸ் அட்​மிரல் அனுபம், நவீன நாற்காலியை அறிமுகப்படுத்திய பின்னர் பேசுகையில், மாற்​றுத்திற​னாளி​கள், போரில் கால்​கள் பாதிக்​கப்​பட்ட ராணுவத்​தினர் உள்ளிட்டோர் இந்த நவீன சக்கர நாற்​காலியால் பயனடைவர் என்றார்.

“ஐஐடி​யில் ஏராள​மான புதிய கண்​டு​பிடிப்​பு​கள், தொழில்​நுட்​பங்​கள் உரு​வாக்​கப்​பட்டு வரு​கின்​றன. புதிய கண்​டு​பிடிப்​பு​கள் அனைத்து தரப்பு மக்​களுக்​கும் குறிப்​பாக கிராமப்​புற மக்​கள், தொலை​தூர பகு​தி​யில் வசிப்​போருக்கு பயன்பட வேண்​டும்,” என்றும் திரு அனுபம் கேட்டுக்கொண்டார்.

சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி கூறுகையில், சக்கர நாற்​காலிகளின் எடை பொது​வாக 17 கிலோ அளவில் இருக்​கும் என்பதால் பயனாளி​கள் சற்று சிரமப்படுவர் என்றும் ஐஐடி உரு​வாக்​கி​யுள்ள சக்கர நாற்​காலி​யின் எடை 8.5 கிலோ​ மட்டுமே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“குறைந்த எடை​யில், உலகத் தரத்​தில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இது உறு​தி​யானது, பாது​காப்​பானது. இது​போன்ற சக்கர நாற்​காலிகளை வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்ய ரூ.2.40 லட்​சம் செல​வாகும். ஆனால், ஐஐடி​யின் சக்கர நாற்​காலி ரூ.75 ஆயிரத்​துக்​கு கிடைக்​கும்,” என்றார் திரு காமகோடி.

ஐஐடி துளிர் நிறு​வன​மான ‘த்ரைவ் மொபிலிட்டி’ நிறு​வனம் இந்த சக்கர நாற்​காலிகளை வணி​க ரீ​தி​யில் தயாரிக்க உள்​ளது. இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​த​மும் கையெழுத்​தாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்