மதுரை: விரி விதிப்பில் முறைகேடு தொடர்பாக மதுரை மாநகராட்சி பணியாளர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிலர் கைதாகி உள்ளனர் என்றும் உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முறையான வரி செலுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.200 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்துவிட்டது.
அதற்குப் பதிலாக ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.