சென்னை: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அவரது உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின், அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் வயது மூப்பு, கீழே விழுந்தது தொடர்பான சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் திரு நல்லகண்ணு.
அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த இரு நாள்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், நல்லகண்ணுவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் இயற்கை அவரிடம் மன்றாடி வருவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவ அதிகாரபூர்வ அறிக்கைக்காக காத்திருப்பதாகக் கூறினார்.

