திமுகவை மட்டுமே விமர்சிக்கும் புதுக்கட்சி: விஜய்யை சீண்டிய கனிமொழி

திமுகவை மட்டுமே விமர்சிக்கும் புதுக்கட்சி: விஜய்யை சீண்டிய கனிமொழி

1 mins read
28bc28a8-9ed3-4a67-9e94-e1ee8039ed76
மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு தெரிவித்துப் பிரசாரம் மேற்கொண்டார் கனிமொழி. - படம்: இந்து தமிழ் திசை

மானாமதுரை: திமுகவை திரும்பத் திரும்பச் சாடி, பெருமை தேடிக்கொள்ள நினைப்பவர்களை நம்பி தமிழக வாக்காளர்கள் ஏமாந்துவிடக் கூடாது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு தெரிவித்து மேற்கொண்ட பிரசாரத்தின்போது, பாஜகவுக்கு தமிழகத்தில் நிறைய ‘பி டீம்’ இருப்பதாக அவர் விமர்சித்தார்.

“இவ்வாறு மறைமுகக் கூட்டணி வைத்திருப்பவர்கள் திமுகவை மட்டுமே விமர்சிப்பார்கள். பாஜக என்ன செய்தாலும் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க மாட்டார்கள. நம்முடைய பகைவர்கள் என்ற பெருமையை தேடிக்கொள்ள நினைக்கிறார்கள். இந்தத் தேர்தலில் நாம் கவனமாக வாக்களிக்க வேண்டும்,” என்றார் கனிமொழி.

புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளவர்களும் திமுகவை மட்டும்தான் எதிர்த்துப் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் புதுமுகங்கள் அதிமுகவை எதிர்த்துக் கேள்வி கேட்க மாட்டார்கள் என்றார்.

“இத்தேர்தலில் பாஜகவை முறியடிப்போம். பாஜகவுக்கு ஒருபிடி மண்கூட தமிழகத்தில் இருந்து கிடைக்காது. உங்களுடைய வாக்குகளை வீணாக்கக்கூடிய செயல்களில் ஈடுபடாதீர்கள்,” என்று கனிமொழி கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்