பதிவுத் துறையைத் தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: தமிழக அரசு

பதிவுத் துறையைத் தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை: தமிழக அரசு

படம்: லைவ் சென்னை

30 Oct 2026 - 6:28 pm

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் அமைய​வுள்ள மாதிரி பதிவு நிலையங்களின் கட்​டமைப்பு வசதி​களை மட்​டுமே தனியார் நிறு​வனங்​கள் நிர்​வகிக்​கும் என்று தமிழக அரசு விளக்​கம் அளித்​துள்​ளது.

ஆவணப் பதிவுக்​கான சட்​டபூர்வ அதி​காரம் பதிவுத்​துறை​யிடமே இருக்​கும் என்று அது உறுதியளித்துள்ளது.

இது​குறித்து பதிவுத்​துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

“தமிழகத்​தில் ஆவணப்​ப​திவு, திரு​மணப் பதிவுச் சேவை​களை எளிமைப்​படுத்தி வேகமாக வழங்க மாநிலம் முழு​வதும் 25 மாதிரி பதிவு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

“நடப்பு (2026–27) நிதி ஆண்​டில் முதல்​கட்​ட​மாக ரூ.7.84 கோடி​யில் சென்னை வடக்கு, மத்​திய சென்னை, சென்னை தெற்கு, செங்​கல்​பட்டு, கோவை வடக்கு ஆகிய ஐந்து பதிவு மாவட்​டங்​களில் மாதிரி நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

“அதேநேரம், பதிவுத்​துறை​யின் சட்​ட​பூர்​வப் பொறுப்​பு​களை தனியார்​மய​மாக்​கும் திட்​டம் இல்லை. தற்​போது சார்​ப​திவாளர்​கள் ஆவணங்​களை சட்​டப்​படி பரிசீலித்துப் பதிவு செய்​வதுடன், மக்​களுக்​கான உதவி, அடிப்​படை வசதி​கள் பராமரிப்பு உள்​ளிட்ட முகப்பு நிர்​வாகப் பணிகளை​யும் சேர்த்​துக் கவனிக்க வேண்​டியுள்​ளது.

“அப்​பணிகளை பிரித்து சார்​ப​திவாளர்​கள் சட்​டரீதி​யான ஆவணப் பரிசீலனை​யில் முழு​மையாக கவனம் செலுத்​தும் வகை​யிலேயே மாதிரி பதிவு மையங்​கள் உரு​வாக்​கப்​படு​கின்​றன,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நிலையங்களின் கட்​டமைப்பு, தினசரி செயல்​பாடுகள், பராமரிப்​புப் பணிகள் மட்​டுமே ஒப்பந்தப் புள்ளி மூலம் தேர்வு செய்​யப்​பட்டு தனியார் சேவை வழங்​குநரிடம் ஐந்து ஆண்​டுகளுக்கு ஒப்​படைக்​கப்​படும்,” என்று அதிகாரிகள் கூறினர்.

இதனால் ஆவணங்களைப் பரிசீலித்து பதிவு செய்​வதற்​கான சட்​ட​பூர்வ அதி​காரம் சார்​ப​திவாளர்​களிடம் மட்​டுமே இருக்​கும். தற்​போதைய பதிவு நடைமுறைகளில் எவ்​வித மாற்​றமும் இருக்காது.

தற்​போது சொத்து அமைந்​துள்ள பகுதி​யின் சார்​ப​திவாளர் அலு​வல​கத்​தில் மட்​டுமே பதிவுசெய்ய முடியும். புதிய மாதிரி நிலையங்கள் மூலம், ஒரே பதிவு மாவட்​டத்​துக்​குள் வசதி​யான மையத்​தில் பதிவுச்​சேவை பெறலாம்.

ஐந்து நிலையங்களின் செயல்​பாடுகள் மதிப்​பீடு செய்​யப்​பட்ட பின்​னர், மேலும் 20 நிலையங்​கள் தமிழகத்​தின் பிற பகுதி​களில் விரிவுபடுத்​தப்​படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்