சென்னை: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் எதிர்வரும் 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும் குற்றச்செயல்களும் அரங்கேறி வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் சாடியுள்ளார்.
மேலும், பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை அவர் அந்த அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமையாளர்கள் சுதந்திரமாக சர்வ சாதாரணமாக குற்றம்புரிவது வாடிக்கையாக உள்ளது என்றும் ஆறு முதல் அறுபது வயதை கடந்த பெண்கள் வரை திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளித்துள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.