ஒலி, மாசற்ற தீபாவளி: பட்டாசு வெடிக்க தமிழகத்தில் கட்டுப்பாடு

ஒலி, மாசற்ற தீபாவளி: பட்டாசு வெடிக்க தமிழகத்தில் கட்டுப்பாடு

கோப்புப் படம்: தினமணி

04 Nov 2026 - 2:46 pm

1 mins read

சென்னை: தீபாவளிப் பண்டிகையை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடும் பொருட்டு, பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த ஒலியும் குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைப்பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள், நலச்சங்கங்களின் அனுமதியோடு, திறந்தவெளியில் அனைவரும் ஒன்றாகக் கூடி கூட்டு முறையில் பட்டாசுகளை வெடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் பகுதிகளுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களின் அருகே பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்