சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அவர் உடல்நலப் பரிசோதனைக்காக வியாழக்கிழமை (ஜூன் 19) சென்னையில் இருந்து, விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் அவர் தனது வழக்கமான மருத்தவப் பரிசோதனைகளை மேற்கொள்வார் என்றும் அங்கேயே ஒரு வார காலம் தங்கியிருந்து, சிகிச்சை பெறுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அவருக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினை உள்ளதா, அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை வழங்கப்படப்போகிறது என்பன குறித்து அதிகாரபூர்வத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
தற்போது போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

