செங்கோட்டையன் 10வது முறையாக எம்எல்ஏ ஆனார்

செங்கோட்டையன் 10வது முறையாக எம்எல்ஏ ஆனார்

1 mins read
4e782298-b520-4aea-9ec0-0b7fe35d257a
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு, 13,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற செங்கோட்டையன். - படம்: தி இந்து

கோபி: தமிழக அரசியலில் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன், பல சகாப்தங்களாகத் தனது கோட்டையாக விளங்கும் ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையம் தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 10வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதுடன், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன், ஏறக்குறைய 13,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி இவர் வெற்றி பெற்றுள்ளார். திமுகவில் நல்லசிவம், அதிமுகவில் பிரபு, நாதகவில் சீதாலட்சுமி போட்டியிட்டனர்.

இத்தனை ஆண்டுகளாகத் தொகுதியில் அவர் செய்த மக்கள் பணிகளும் அவருக்கும் தொகுதி மக்களுக்குமான நெருக்கமான உறவுமே இந்தத் தொடர் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து தவெகவுக்குச் சென்ற செங்கோட்டையன் தனது தொகுதியில் முதல்முறையாக தவெக சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்