'பத்தாவது பட்ஜெட் யாருக்கும் ‘பத்தாத பட்ஜெட்'

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் "யாருக்கும் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் உரைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திரு ஸ்டாலின் கூறுகையில், “தமிழக பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் 196 நிமிடங்கள் வாசித்துள்ளார். முன்னதாக மத்திய பட்ஜெட்டை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார்.

"இதிலிருந்தே தெரிகிறது. பாஜக அரசை தமிழக அரசு எவ்வாறு பின்பற்றுகிறது என்று. இது அதிமுக ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கையாக இருக்கும். அதிமுக அரசில் நிதி, வருவாய் பற்றாக்குறை, கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

“திமுக ஆட்சியில் இருக்கும்போது கடன் சுமை ரூ.1 லட்சம் கோடி. தற்போது அதிமுக அரசில் இது மூன்று மடங்காக அதிகரித்து உள்ளது. தற்போது ஒரு மனிதனின் கணக்கில் 57,000 ரூபாய் என்ற அளவில் கடன் சுமை இருக்கிறது.

“அதுமட்டுமின்றி, அதிமுக அரசில் தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாகம் வரை ஊழல், லஞ்சத்தால் மூழ்கியிருக்கிறது.

“இந்த பட்ஜெட்டில் எந்த தொலைநோக்குத் திட்டமும் வளர்ச்சித் திட்டமும் இல்லை. அமைச்சர்கள் வேலுமணி, தங்க மணி, முதல்வரின் இலாகாகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஏன் என்று தெரியவில்லை.

“எனவே, ஓபிஎஸ்ஸின் 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத, எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக இருக்கிறது,” என்று கூறினார்.

இதற்கிடையே, வேளாண்மை, தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!