தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியாக ரூ. 40 கோடி

1 mins read
594e2e7d-4a6d-42cb-8df3-9cd98ab7cf16
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.  - கோப்புப்படம்

கம்பம்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியாக இதுவரை ரூ.40 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கம்பத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக சாா்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்டத்தின் கம்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக மூத்த உறுப்பினர்கள் 1, 100 பேருக்கு ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் அடங்கிய பொற்கிழியை வழங்கி உரையாற்றினார்.

அப்போது அவர், “அமைச்சராக பொறுப்பேற்று தேனி மாவட்டத்திற்கு முதன்முறையாக வந்துள்ளேன். கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும். அப்படி என்றால் நான் வருகிறேன் என்றேன். அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ரூ. 40 கோடி வரை திமுக வழங்கியுள்ளது. பெரியார், அண்ணாவை உங்கள் வடிவில் பார்க்கிறேன்.

“வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டும்,” என்று பேசினார்.

குறிப்புச் சொற்கள்