புரட்டிப்போட்ட மிச்சாங்

புரட்டிப்போட்ட மிச்சாங்

1 mins read
c36aa95f-be37-482a-aa56-10afff19c5f1
சென்னையில் படகுகள் மூலமாகவும் உணவுப் பொட்டலங்களும் மருந்துகளும் விநியோகிக்கப்பட்படன. - படம்: ஊடகம்

[ο]சென்னையில் இருந்து புறப்படும் 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

[ο]சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 7) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

[ο]வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகளும் குடிநீர் புட்டிகளும் வழங்கினார்.

[ο]இதற்கிடையே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

[ο]வெள்ள பாதிப்புக்கு யார் மீதும் பழிபோட்டு எந்த பயனும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.மக்கள் களநிலவரத்தை நன்கு அறிந்து வைத்திருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

[ο]மிச்சாங் புயல் காரணமாக தமிழக டெல்டா பகுதி மீனவர்கள் 2.10 லட்சம் பேர் கடந்த ஐந்து நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

[ο]புயல் காரணமாக நாகை கடற்பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் இருந்த நாகை, புதுக்கோட்டை, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 8 நாள்களுக்குப் பிறகு டிசம்பர் 6ஆம் தேதி கடலுக்குச் சென்றனர்.

[ο]சென்னை மழை வெள்ளத்தில் சிக்கி 2 லட்சம் வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்