திருச்சி: அமைச்சர் என்பதைக் கடந்து, திமுக உறுப்பினர் என்ற அடிப்படையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தம்மால் ஏற்க இயலாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
“மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது.
“அதே போன்று கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதைத்தான் நாங்கள் ஆதரிப்போம்,” என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

