16 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள்

சென்னை: மக்களவைத் தேர்தல் 2024க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை புதன்கிழமை (மார்ச் 20) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது,” என்றார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல்: சென்னை வடக்கு - ராயபுரம் மனோ, சென்னை தெற்கு - ஜெயவர்தன், காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர், அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்,
கிருஷ்ணகிரி - வி.ஜெயப்பிரகாஷ், ஆரணி - ஜி.வி.கஜேந்திரன், சேலம் - விக்னேஷ், தேனி - நாராயணசாமி, விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ், நாமக்கல் - எஸ்.தமிழ்மணி, ஈரோடு: ஆற்றல் அசோக்குமார், கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல், சிதம்பரம் (தனி): சந்திரகாசன்,
நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர், மதுரை: பி.சரவணன், ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியை அதிமுக வழங்கியுள்ளது.

அதேபோல எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!