சென்னை: விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கான திமுக செயலாளராகப் பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக திமுக அறிவித்துள்ளது.
இதை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு புதிய செயலாளராக டாக்டர் ப.சேகர் நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த நா.புகழேந்தி உயிரிழந்த காரணத்தால் கட்சிப் பணிகள் நடந்திட கெளதம் சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

