மலை ரயிலுக்கு 125 வயது; குன்னூர் ரயில் நிலையத்தில் கொண்டாட்டம்

மலை ரயிலுக்கு 125 வயது; குன்னூர் ரயில் நிலையத்தில் கொண்டாட்டம்

1 mins read
d2154b2a-7e24-4a23-812b-60676bf73a9c
குன்னூர் ரயில் நிலையத்தில் கொண்டாட்டம். - படம்: ஊடகம்

நீலகிரி: நீலகிரியில் இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை தொடங்கி 125 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதையடுத்து அதன் பிறந்தநாளை நீலகிரி மக்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். கடந்த 1899ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மலை ரயில் இயக்கப்பட்டது.

அதன் பின்னர் 125 ஆண்டுகளாக அதன் சேவை நீடித்து வருகிறது. 125வது ஆண்டை குறிப்பிட்டு கொண்டாடும் வகையில் குன்னூர் ரயில் நிலையத்தில் மலை ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

மலை ரயில் நன்கு அலங்கரிக்கப்பட்டு வந்து சேர்ந்த நிலையில், குன்னூர் ரயில் நிலையத்தில் கேக் வெட்டி மலை ரயில் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகளும் கேக்கும் வழங்கப்பட்டன.

மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் புறப்பட்டது முதல் குன்னூரை அடையும் வரை ஏராளமான குகைகள், அருவிகள், பாலங்கள், இயற்கை காட்சிகள் ஆகியவற்றை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது என மலை ரயிலில் வந்த சுற்றுலா பயணிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்