சென்னை: மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள புது வீட்டில் தொண்டர்களைச் சந்தித்து வருகிறார் சசிகலா.
இந்நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.
அந்தச் சுவரொட்டிகளில், ‘2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் ஒன்றிணைவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் என்றும் குறிப்பிட்டு, அவர் அனைத்துத் தரப்பினரையும் சந்திக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சசிகலாவின் இலக்கு 2026 என்றும் அனைவரும் ஒன்றுசேர்ந்து வென்று காட்டுவோம் என்றும் சுவரொட்டிகளில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அவர், எந்த நேரத்திலும் சில முக்கியப் புள்ளிகளைச் சந்தித்துப் பேசுவார் என்றும் அந்த முக்கியப் புள்ளிகள் யார் என்பது விரைவில் தெரிய வரும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

