கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்திய 65 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், மெத்தனால் கலந்த தண்ணீரைப் பயன்படுத்தியதே இந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு குறித்து காவல்துறையின் சிபிசிஐடி பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த கவுதம் சந்த் உள்ளிட்ட இருவர் அரசு உரிமம் பெற்று பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மெத்தனாலை இறக்குமதி செய்கின்றனர்.
இந்நிலையில், இருவரும் எந்தவித உரிமமும் இல்லாத சிவகுமார், மாதேஷ் ஆகிய இருவருக்கும் மெத்தனாலை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த இருவரிடமும் இருந்துதான் கள்ளக்குறிச்சி சாராய வியாபாரிகள் மெத்தனாலை வாங்கி உள்ளனர். பிறகு அதை தண்ணீரில் கலந்து விற்றுள்ளனர்.
இது தொடர்பாக முக்கிய குற்றவாளி உட்பட்ட 11 பேரை சிபிசிஐடி பிரிவினர் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
மெத்தனால் கலவையில் வெறும் தண்ணீரை மட்டுமே கலந்து விற்பனை செய்ததை சிபிசிஐடி அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

