தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவிகுறித்து முதல்வர் ஸ்டாலின் பதில்

1 mins read
c3af72ab-de67-4dad-bbe2-95c60df6ee97
இப்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்று நீண்ட நாள்களாக ஊடகங்களில் தகவல் வலம் வருகிறது.

இதனை திமுக தலைவருமான ஸ்டாலின் மறுக்கவோ ஆமோதிக்கவோ இல்லை.

இந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) அன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

“எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது. மழைப்பொழிவு எந்தளவில் இருந்தாலும் தமிழக அரசு அதை எதிர்கொள்ளும். பருவ மழைக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது,” என்று கூறினார்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், உதயநிதி துணை முதல்வராவது குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை என்று பதிலளித்தார்.

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவிருக்கிறது என்ற பரவலான பேச்சுக்கு இடையே இப்போதைக்கு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்