தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவிரி நீரை வரவேற்ற நாகப்பட்டின விவசாயிகள்

1 mins read
5c381b5f-ef4e-46d7-93ee-2dac362c5d3b
இறையான்குடி தடுப்பணைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்து காவிரியை வரவேற்ற நாகப்பட்டின விவசாயிகள். - படம்: ஊடகம்

நாகை: ஜூலை 28 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், தஞ்சாவூர் மாவட்டத்தின் கல்லணையை அடைந்தது. பின்னர் அங்கிருந்து ஜூலை 31ஆம் தேதி திருவாரூர் பாசனத்துக்குத் திறந்து விடப்பட்டது. அந்தத் தண்ணீர் வெண்ணாற்றில் இருந்து பிரிந்து பாண்டவையாற்றின் வழி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான இறையான்குடி தடுப்பணைக்கு வந்து சேர்ந்தது.

அதனையடுத்து பொதுமக்களும் விவசாயிகளும் இறையான்குடி தடுப்பணைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் மற்றும் விதை நெல் தூவியும் பட்டாசுகள் வெடித்தும் பெண்கள் கும்மி பாட்டுப்பாடியும் வழிபாடு செய்தும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இந்த பாண்டவையாற்றின் மூலம் வரும் காவிரி நீரால், இறையான்குடி, வடக்கு பனையூர், தெற்கு பனையூர், வல்லவினாயகன் கோட்டம், களத்திடல்கரை , மகிழி உள்ளிட்ட விவசாய நிலங்கள் பயனடைகின்றன.

குறிப்புச் சொற்கள்