மதுரை மாவட்டத்தின் முக்கிய தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் பதுருதீன் (எ) முஸ்தபா 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் 63,414 வாக்குகள் பெற்று பழனிவேல் தியாகராஜனைத் தோற்கடித்துள்ளார்.
திமுகவின் முக்கிய அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் 44,286 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்ட திரைப்பட இயக்குநர் சுந்தர் சி, 33,538 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
அதேபோல் திமுகவின் மற்றொரு அமைச்சரான பி.மூர்த்தியை, மதுரை கிழக்கில் தவெகவின் கார்த்திகேயன் 16,547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மூர்த்தி 2வது இடத்தில் வந்துள்ளார்.
மதுரை மத்தி, நகர்ப்பகுதி என்பதோடு அத்தொகுதியில் ஏரளமானவர்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமலேயே இருக்கிறது. இந்தக் காரணங்களால் இந்தத் தொகுதியை சேர்ந்த மக்கள் தவெகவிற்கு வாக்களித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரை வடக்குத் தொகுதியில் தவெகவின் ஏ.கல்லானை, 18,038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.

