மதுரை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மதுரையில் வாகனங்களில் செல்வோரின் நலன் கருதி போக்குவரத்து சந்திப்புகளில் (சிக்னல்) தென்னங்கீற்றைக் கொண்டு பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சி இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மதுரை காளவாசல், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சார்பாக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில இடங்களில் இதேபோன்ற பந்தல்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோடைக் காலத்தில் போக்குவரத்துக் காவலர்களின் நலன் கருதி குளிர் வசதி கொண்ட தொப்பி வழங்கப்படுகிறது.
மேலும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் மோர், இளநீர் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

