சென்னை: தமிழக அரசு சார்பில் வெளிநாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வரவுசெலவு திட்டத்தை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய போது, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இதை அறிவித்தார்.
அப்போது, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் திட்டத்தை மொத்த இந்தியாவும் வியந்து பார்ப்பதாகக் கூறினார்.
“அடுத்த கட்டமாக, வெளி மாநிலங்கள் தலைநகரங்களான டெல்லி, கோல்கத்தா திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் இத்தகைய கண்காட்சிகள் நடத்தப்படும்.
“மேலும், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தமிழ் புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்,” என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.