தமிழ்நாட்டில் நாளை தேர்தல்

தமிழ்நாட்டில் நாளை தேர்தல்

3 mins read
234 தொகுதிகள், 4,023 வேட்பாளர்கள், 5.73 கோடி வாக்காளர்கள்: தேர்தல் களம்
fddf353d-b87c-4727-9358-721830b32cba
தேர்தல் பணியாளர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கின்றனர். வாக்காளர் பெனர்கள் கள், கட்சிச் சின்னங்களை இந்தியரங்களில் பதிவிடும் பணியை கடந்த வாரம் அவர்கள் மேற்கொண்டனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

சென்னை: தமிழ்நாடு  2026ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்கு நாளை (ஏப்ரல் 23) தேர்தல்.

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சிகளுக்கிடையிலான இருமுனைத் தேர்தலாக இன்றி, விஜய்யின் அரசியல் வருகை, மாறி வரும் தேசிய சூழல் ஆகியவற்றினால் இந்த தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் போட்டி கொண்டதாக அமைந்துள்ளது.

இளம் வாக்காளர்களிடம் மின்னிலக்கம், சமூக ஊடகங்களும் இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 
இளம் வாக்காளர்களிடம் மின்னிலக்கம், சமூக ஊடகங்களும் இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.  - படம்: தினமணி

நகர்புறங்கள், இளைஞர்கள் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக விஜய் இருப்பார் என்று கணிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசியலில் பெண்கள் வாக்குகளே இறுதி தீர்ப்பை தொடர்ந்து தீர்மானிக்கும் சக்தி என்பதால் அவர்களைக் கவரும் வகையில் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்தன. நிதி உதவி திட்டங்கள், அத்தியாவசிய பொருளுகளுக்கு மானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி மகளிர் வாக்குகளை கவர தீவிரம் காட்டியிருந்தனர்.

முதன்முறையாக வாக்காளர் அதிகமாக இருப்பதால், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, தொழில் முனைப்புத்திறன் போன்றவையும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

83,875 காவல்துறைப் பணி​யாளர்​கள், 300 கம்​பெனி துணை ராணுவப் படையினர், 40,427 காவல்துறை அல்​லாத பணி​யாளர்​கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
83,875 காவல்துறைப் பணி​யாளர்​கள், 300 கம்​பெனி துணை ராணுவப் படையினர், 40,427 காவல்துறை அல்​லாத பணி​யாளர்​கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். - படம்: தினமணி

[ο]வாக்​குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடை​பெறும்.

[ο] மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு. 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

[ο]5.73 கோடி பேர் வாக்​களிக்க உள்​ளனர். 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. வாக்​குச் சாவடி பணி​யில் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​படு​கின்​றனர்.

[ο]83,875 காவல்துறைப் பணி​யாளர்​கள், 300 கம்​பெனி துணை ராணுவப் படையினர், 40,427 காவல்துறை அல்​லாத பணி​யாளர்​கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

[ο]மொத்தம் 136 பொதுப் பார்​வை​யாளர்​கள், 50 காவல் பார்​வை​யாளர்​கள், 150 செல​வினப் பார்வை​யாளர்​கள் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களும் தொடர் கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

வாக்​குப் பதிவு இயந்​திரங்​களைப் பலத்த பாது​காப்​புடன் அனைத்து வாக்​குச் சாவடிகளுக்கும் அனுப்​பும் பணி நடைபெறுகிறது. வாக்​குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடை​பெறுகிறது.

தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா, அசாம்​, மேற்​கு வங்​கம்​ ஆகிய ஐந்து மாநிலங்​களுக்​கும்​ சேர்த்​து மே 4ஆம் தேதி ​வாக்​கு எண்​ணிக்​கை நடைபெறும்.

பிரசார ஓய்வு நேரம், தேர்தல் விதிமுறைகள்

தேர்​தல் பரப்புரைகள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி​யுடன் நிறைவுபெற்றன. அப்போதிலிருந்து வியாழக்கிழமை வாக்குபதிவு நிறைவடையும் மாலை 6 மணிவரை 48 மணிநேரத்துக்குப் பிரசார ஓய்வு நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமைமுதல் நாளை புதன்கிழமை (ஏப்ரல் 23) நள்​ளிரவு 12 மணிவரை மதுக்​கடைகள், மதுக்​கூடங்​களை மூட தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஓய்வுக் காலத்​தில் தேர்​தல் தொடர்​பான பொதுக் கூட்​டம், ஊர்​வலம் நடத்​தக்கூடாது. தேர்​தல் விவ​காரங்களை, திரைப்​படம், தொலைக்​காட்​சி, ‘எப்​எம் ரேடியோ’, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்தச் சாதனம் வாயி​லாகவும் பொது மக்​களின் பார்​வைக்குக் கொண்டுசெல்லக்கூடாது.

அத்​தொகு​தி​யின் வாக்​காளர்​ அல்​லாத, அனைத்து அரசி​யல் கட்சி நிர்​வாகி​கள், கட்​சிப் பணி​யாளர்​கள் அனைவரும் ​தொகு​தியைவிட்டு வெளி​யேற வேண்​டும்.

தமிழகம் முழுதும் திருமண மண்​டபங்​கள், தங்​கும் விடு​தி​களில் செவ்வாய்க்கிமை மாலை முதலே காவல்துறையினர் தீவிரச் சோதனை நடத்​தி, தொகு​திக்குத் தொடர்பு இல்லாதவர்களை வெளி​யேற்​றும் பணி​யில் ஈடு​பட்டு வருகின்றனர்.

கட்சிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) மாலையுடன் தேர்தல் பரப்புரைகளை நிறைவுசெய்தன.
கட்சிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) மாலையுடன் தேர்தல் பரப்புரைகளை நிறைவுசெய்தன. - படம்: விகடன்

பரப்புரைகளை முடித்துக்கொண்ட கட்சிகள்

சென்னை கொளத்​தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்​டா​லின், சேலம் எடப்​பாடி​யில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, சென்னை நந்​தனத்​தில் தவெக தலை​வர் விஜய், ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, சென்னை மயிலாப்பூரில் தமிழிசை சவுந்​தர​ராஜன், சாத்​தூரில் நயி​னார் நாகேந்​திரன், தரு​மபுரி​யில் பாமக தலை​வர் அன்​புமணி, சென்னை எழும்​பூரில் சசிகலா, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், காரைக்​குடி​யில் நாதக மாநில ஒருங்​கிணைப்​பாளர் சீமான், சென்​னை​யில் ஜி.கே.​வாசன் ஆகியோர் தங்​கள் இறு​திக்​கட்ட பரப்புரைகளை நிறைவு செய்​தனர்.

பெரம்பலூர் செங்குணம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.44 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் செங்குணம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.44 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

ரூ.1,200 கோடிக்கு மேல் பறிமுதல்: தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம்

தேர்​தல் விதி​கள் நடப்புக்கு வந்த மார்ச் 15ஆம் தேதி​யிலிருந்​து, தலா 2,106 பறக்​கும் படைகள், நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் நடத்​திய சோதனை​யில் செவ்வாய்க்கிழமை வரையில் ஏறக்குறைய ரூ.1,200 கோடிக்கு மேல் ரொக்​கம், மது​பானங்​கள், தங்​கம், வெள்ளிப் பொருள்​கள், வாக்​காளர்​களுக்கு வழங்​கு​வதற்​காகக் கொண்டுசெல்​லப்​பட்ட இலவசப் பொருள்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

குறிப்புச் சொற்கள்