சென்னை: தீபாவளித் திருநாளையொட்டி தமிழகத்தில் கடந்த புதன்கிழமையும் (அக்டோபர் 30) தீபாவளி நாளான வியாழக்கிழமையும் ரூ.430 கோடிக்கு மதுபானம் விற்பனையானது என்று ‘டாஸ்மாக்’ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது, சென்ற ஆண்டைக் காட்டிலும் ரூ.38 கோடி குறைவு எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு தீபாவளியின்போது மதுரை மண்டலத்தில் ஆக அதிகமாக 101.04 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. இம்முறை முதலிடத்தைச் சென்னை மண்டலம் தட்டிப் பறித்தது. இவ்வாண்டு தீபாவளியின்போது சென்னை மண்டலத்தில் ரூ.101.34 கோடிக்கு மது விற்பனையானது.
மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மண்டலங்கள் அடுத்தடுத்த இடங்களில் வந்தன.
தமிழக அரசாங்கம் மொத்தம் 4,829 ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளை நடத்தி வருகிறது. அவை நண்பகல் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை செயல்படுகின்றன. ‘டாஸ்மாக்’ மது விற்பனை மூலம் வரும் வருவாய் தமிழக அரசுக்கு முக்கிய வருவாயாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.