திமுகவில் இணைந்த வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவில் அடைக்கலம்

1 mins read
e9f41f62-d5bf-4337-ae91-c2083e7440f9
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர். - படம்: இந்து தமிழ்

தஞ்சாவூர்: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் சில நாள்களுக்கு முன்னர் திமுகவில் சேர்ந்தார். அதையடுத்து, அவருடைய ஆதரவாளர்கள், தங்களிடம் எவ்விதக் கருத்தும் கேட்காமலேயே வைத்திலிங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து திமுகவில் சேர்ந்துள்ளார்.

தனால் தாங்கள் அனைவரும், அதிமுகவில் இணைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சாமிநாதன், சண்முகபிரபு, ராஜா, செல்லதுரை உள்ளிட்ட 30 பேர் திமுகவுக்கு செல்ல விருப்பம் இல்லாமல், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்கள் திரு வைத்திலிங்கம் குறித்துப் பேசுகையில், “திரு வைத்திலிங்கம் மீண்டும் அதிமுகவுக்குத்தான் செல்வார் என்பதை உறுதியாக நம்பியிருந்தோம். ஆனால், எங்களிடம் ஆலோசனையோ, கருத்தோ கேட்காமல் எதிரிக்கட்சியான திமுகவில் இணைந்ததால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்,” என்றனர்.

எனவே, எங்களை நட்டாற்றில் விட்டுச் சென்ற வைத்திலிங்கத்திடமிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம். எங்களைப் போன்று பலரும் விரக்தியில் உள்ளனர். அவர்களும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளனர் என்றனர்.

இதற்கிடையில், அண்மையில் திமுகவில் சேர்ந்த வைத்திலிங்கத்திற்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகப் பேசப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்