சென்னை: தவெக தலைவர் விஜய் மீண்டும் சிபிஐ முன்பு முன்னிலையாகிறார்.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) புதுடெல்லியில் சிபிஐ முன்பு முன்னிலையாக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு விஜய் இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முன்னிலையாகினார்.
புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சிபிஐ முன்பு முன்னிலையாகியுள்ளனர்.
கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) முன்னிலையாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே விஜய் அழைப்பாணையை ஏற்று முன்னிலையாக மாட்டார் என பின்னேரத்தில் தகவல் வெளியானது.
தவெக தலைவர் விஜய் செவ்வாய்க்கிழமை சிபிஐ விசாரணக்கு முன்னிலையாகவில்லை எனவும் வேட்பாளர் நேர்காணல் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தவெக தரப்பில் கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் திங்கட்கிழமை (மார்ச் 9) மறுதணிக்கை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் படத்தைத் தணிக்கை செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

