ஆகஸ்டில் விஜய்யின் தமிழகச் சுற்றுப்பயணம்

1 mins read
b9f9edf2-d944-473b-b67b-ce3d598c01c9
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். - படம்: இணையம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி தஞ்சாவூரில் இருந்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

முதல்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

விவசாயிகளின் வாக்குகளைக் கவரவே விஜய் டெல்டா மாவட்டத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘ஜனநாயகன்’ படத்தின் பணிகளை முடித்த கையுடன் முழுவீச்சில் அரசியலில் இறங்க உள்ளார்.

அதற்கு முன்னதாக கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ள அவர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சிக்கான 28 அணிகளை உருவாக்கி அதற்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

2026 தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியலில் குதித்துள்ள விஜய், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தவெகவின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார்.

குறிப்புச் சொற்கள்