தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுகவுடன்தான் நிற்போம்: திருமாவளவன் திட்டவட்டம்

1 mins read
d31153fa-3f8f-4818-8298-eb414dbda00b
திருமாவளவன். - படம்: ஊடகம்

சென்னை: தமக்குத் துணை முதல்வர் பதவி அளிப்பதாகக் கூறி, கூட்டணி வைக்க சில கட்சிகள் அழைப்பு விடுத்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ராணிப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், காங்கிரஸ் கட்சியுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியோடு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமாவளவனும் கலந்துகொண்டதால், தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக் கணக்குகள் மாற வாய்ப்புள்ளதாக பரபரப்பு எழுந்தது.

ஆனால், துணை முதல்வர் ஆசை காட்டினால் நான் மயங்க மாட்டேன்,” என்றார் திருமா.

“சனாதானத்தை பற்றி திருமாவளவன் பேசியபோது பிரச்சனை ஆகவில்லை. உதயநிதி ஸ்டாலின் பேசும்போது பிரச்சினை ஆக்குகின்றனர். எங்கள் கருத்து இந்து சமூகத்திற்கு எதிரான கருத்து இல்லை. கருத்தியலுக்கு எதிரானதுதான்.

“தற்போது நடைபயணம் கிளம்பியுள்ளவர்கள் எல்லாம் பாஜகவை ஆதரிப்பவர்கள். ஆனால், திமுக தனியாகவே எதிரிகளைச் சந்திக்கும் அவர்களுக்கு திருமாவளவன் போன்றவர்கள் தேவை இல்லை.

“நானும் 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன். கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், ராகுல் என அனைவரோடும் அரசியலில் களத்தில் இருந்துள்ளேன்.

“சங்பரிவார் தமிழகத்தில் காலுன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதனால் திமுகவுடன் உறுதியாக நிற்கிறோம்,” என்றார் திருமாவளவன்.

குறிப்புச் சொற்கள்