சென்னை: தமிழக மக்களுக்கும் பிழைப்புக்காக தமிழகம் வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் திமுக அரசு உருவாக்கியுள்ளது என தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக ஆட்சியாளர்கள் கொள்ளை அடிப்பதில்தான் குறியாக இருக்கின்றனர் என்றும் அதனால்தான் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை என்றும் அறிக்கை ஒன்றில் அவர் விமர்சித்துள்ளார்.
ஆனால், தமிழகம் பாதுகாப்பாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் மனசாட்சி இன்றி, வாய் கூசாமல் பொய் சொல்வதாகவும் விஜய் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பீகார் இளையர் தன் மனைவி, குழந்தையுடன் கொல்லப்பட்டதை அடுத்து, திமுக அரசை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய், விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுகட்ட தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
“கல்வி நிறுவனங்களில்கூட பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
“பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றச்செயல்களைத் தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை,” என விஜய் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

