மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரின் கன்னத்தில் அறைந்த பெண் உறுப்பினர்

மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரின் கன்னத்தில் அறைந்த பெண் உறுப்பினர்

1 mins read
4054b689-5a5d-48a9-b4c5-0e29ff962a65
மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரின் கன்னத்தில் அறைந்த திமுக மாமன்ற உறுப்பினர் சுகாசினி. - படம்: ஊடகம்

சேலம்: மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரின் கன்னத்தில் அறைந்த திமுக மாமன்ற உறுப்பினரைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு மற்றும் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை (மே 29) மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

அப்போது, மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி எழுந்து, “கட்டட அனுமதி முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே ஏலக்குத்தகை வழங்கப்படுகிறது,” என குற்றம் சாட்டிப் பேசினார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள், அவர்மீது காகிதத்தாள் ஒன்றை வீசினர்.

திமுக உறுப்பினர் சுகாசினி எழுந்து யாதவ மூர்த்தியின் அருகில் சென்று பேசினார்.

அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சுகாசினி, எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தியின் கன்னத்தில் மாறி மாறி அறிந்தார்.

மற்ற உறுப்பினர்கள் எழுந்து இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் கூட்டத்தில் சலசலப்பும் கைகலப்பும் ஏற்பட்டது .

இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் திடீரென மேயர் மேஜை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திமுக உறுப்பினர் சுகாசினி சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றார்.

இந்தச் சம்பவத்தால் சேலம் மாவட்ட அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்