ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரின் ராணுவப் பயிற்சிப் பகுதி விரிவாக்கம்

3 mins read
சிங்கப்பூரின் பரப்பளவைப்போல் ஐந்து மடங்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது
5b181149-18b0-4faa-8394-499d0693cf6b
தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் போர்க்கப்பலிலிருந்து புறப்பட்டு FCU எனப்படும் அதிவேகப் படகு மூலம் ‘ஃபிரெஷ்வாட்டர் பே’ கரைக்கு வந்தார். - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூர் ஆயுதப்படையும் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையும் தங்களின் ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக இரு நாடுகளும் இணைந்து விரிவுபடுத்தப்பட்ட ‘ஷோல்வாட்டர் பே’ பயிற்சிப் பகுதியை மேம்படுத்தியுள்ளன.

விரிவுபடுத்தப்பட்ட பயிற்சிப் பகுதி சிங்கப்பூரின் மொத்தப் பரப்பளவில் ஐந்து மடங்காகும்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நடந்துவந்த விரிவாக்கப் பணிகளின் நிறைவைக் குறிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள ராக்ஹேம்டன் நகரை ஒட்டிய பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ‘கேம்ப் டில்பால்’ ராணுவ முகாமில் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது.

தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ், ஆஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையில் நடந்துவரும் ‘எக்சர்சைஸ் டிரைடண்ட்’ கூட்டு ஆயுதப்படைப் பயிற்சிகளைப் பார்வையிட்டதுடன் விரிவாக்கத்தின் நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

விரிவுபடுத்தப்பட்ட பயிற்சிப் பகுதியின் மேம்பாட்டில் புதிய ராணுவ முகாமான ‘கேம்ப் டில்பால்’ முக்கிய அங்கம் வகிக்கிறது.
விரிவுபடுத்தப்பட்ட பயிற்சிப் பகுதியின் மேம்பாட்டில் புதிய ராணுவ முகாமான ‘கேம்ப் டில்பால்’ முக்கிய அங்கம் வகிக்கிறது. - படம்: எஸ்பிஎச் மீடியா

விரிவுபடுத்தப்பட்ட பயிற்சிப் பகுதியின் மேம்பாட்டில் புதிய ராணுவ முகாமான ‘கேம்ப் டில்பால்’ முக்கிய அங்கம் வகிக்கிறது.

இரு நாட்டு ஆயுதப்படைகளுக்கும் இடையில் நீண்ட காலமாக ஒத்துழைப்பும் பரிமாற்றங்களும் இருந்துவருவதைச் சுட்டிய திரு ஹெங், இரு தரப்புக்கு மத்தியில் உள்ள நம்பிக்கையின் பிரதி பலிப்பாகவும் தற்காப்பு உறவுகளை வலுப்படுத்துவதாகவும் இந்த விரிவாக்கம் அமைகிறது என்றார்.

சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் தொடங்கி அடுத்த ஆண்டுடன் 60 ஆண்டுகளாகின்றன.

கடந்த 34 ஆண்டுகளாக சிங்கப்பூர் ஆயுதப்படை, ஆஸ்திரேலியாவில் ‘எக்சர்சைஸ் வாலபி’ எனும் பயிற்சியைச் செய்து வருகிறது.

2015ஆம் ஆண்டு நடப்புக்குவந்த முழுமையான உத்திபூர்வப் பங்காளித்துவத்தின்கீழ் முக்கிய அங்கம் வகிக்கும் ராணுவப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பகுதி மேம்பாட்டு ஒப்பந்தத்தையொட்டி குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த விரிவாக்கம் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் ஆயுதப்படை வீரர்கள் கடந்த 34 ஆண்டுகளாகப் பயிற்சி செய்துவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ஆயுதப்படை வீரர்கள் கடந்த 34 ஆண்டுகளாகப் பயிற்சி செய்துவருகின்றனர். - படம்: எஸ்பிஎச் மீடியா

“சிங்கப்பூர் ஆயுதப்படையும் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையும் அவற்றின் செயல்பாட்டுத் திறன்களை வளர்க்கவும் தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும் இந்த உயர்தரப் பயிற்சிப் பகுதி தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகிறது,” என்றார் மூத்த துணை அமைச்சர் ஹெங்.

“எதிர்காலப் போர்க்களத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான போர்ப்பயிற்சித் திறன்களை வளர்க்க அதிநவீன பயிற்சி வளாகங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ளன,” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகாய - நிலக் கூட்டு ஆயுதப் பயிற்சித் தளம், நகரச் செயல்பாட்டுத் துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சி வளாகம் போன்றவை ‘ஷோல்வாட்டர் பே’ பயிற்சிப் பகுதியில் அமைந்துள்ளன.

ஆஸ்திரேலிய அரசாங்கமும் சமூகமும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் பயிற்சிக்கு வழங்கிவரும் ஆதரவிற்கு திரு ஹெங் நன்றி நல்கினார்.

ஆஸ்திரேலியத் தற்காப்புத் துறையின் செயலாளர் கிரேக் மொரியார்டி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வலுவான பங்காளித்துவத்திற்காக சிங்கப்பூருக்கு நன்றி தெரிவித்தார்.

மண்ணின் மைந்தர்களான டரும்பால் சமூகத்தினருக்கும் அவர்களது மூதாதையர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் அவர்.

மண்ணின் மைந்தர்களான டரும்பால் சமூகத்தினரின் பாரம்பரிய நடனம்.
மண்ணின் மைந்தர்களான டரும்பால் சமூகத்தினரின் பாரம்பரிய நடனம். - படம்: எஸ்பிஎச் மீடியா

அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கலாசாரத்தை ஒட்டிய இசை, நடனம் உள்ளிட்ட புகைச்சடங்கும் (Smoking ceremony)- நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தன.

மண்ணின் மைந்தர்களான டரும்பால் சமூகத்தினரின் புகைச்சடங்குடன் நிகழ்ச்சி தொடக்கம் கண்டது. 
மண்ணின் மைந்தர்களான டரும்பால் சமூகத்தினரின் புகைச்சடங்குடன் நிகழ்ச்சி தொடக்கம் கண்டது.  - படம்: எஸ்பிஎச் மீடியா

தமது வருகையின் ஓர் அங்கமாக திரு ஹெங், விரிவுபடுத்தப்பட்ட ‘ஷோல்வாட்டர் பே’ பயிற்சிப் பகுதியிலுள்ள புதிய வளாகங்களை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் CH-47F சினூக் ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டார்.

‘எக்சர்சைஸ் டிரைடண்ட்’ கூட்டு ஆயுதப்படைப் பயிற்சியின் பிரதான கூறாக விளங்கும் ஒருங்கிணைந்த கப்பலிலிருந்து கரைவரையிலான பயிற்சியை அவர் நேரில் கண்டார்.

ஒருங்கிணைந்த கப்பலிலிருந்து கரைவரையிலான பயிற்சியை தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் நேரில் கண்டார்.
ஒருங்கிணைந்த கப்பலிலிருந்து கரைவரையிலான பயிற்சியை தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் நேரில் கண்டார். - படம்: எஸ்பிஎச் மீடியா

சினூக் ஹெலிகாப்டர் மூலம் ‘கேம்ப் டில்பால்’ முகாமிலிருந்து போர்க்கப்பலுக்குச் சென்று, பின்னர் FCU எனப்படும் அதிவேகப் படகுமூலம் பயிற்சிப் பகுதியில் அமைந்துள்ள ‘ஃபிரெஷ்வாட்டர் பே’ கரையை அவர் வந்தடைந்தார்.

திரு ஹெங், கூட்டுப் பயிற்சியில் பங்கெடுத்த ஆயுதப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.
திரு ஹெங், கூட்டுப் பயிற்சியில் பங்கெடுத்த ஆயுதப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். - படம்: எஸ்பிஎச் மீடியா

கூட்டுப் பயிற்சியில் பங்கெடுத்த ஆயுதப்படை வீரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் திரு ஹெங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

குறிப்புச் சொற்கள்