பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால் சிங்கப்பூரில் சமூகத் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம்

அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்கள், முதியவர்கள் போன்றோருக்கு கொரோனா கிருமித்தொற்று தொடர்பான தீவிர பரிசோதனையை முடுக்கிவிடப்பட்டிருப்பதால் சமூகத்தில் கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

கிருமித்தொற்று சோதனைகளை முடுக்கிவிடும்போது அதிகமான கிருமித்தொற்றுகள் கண்டறியப்படலாம் என்று நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற இணையம் வழியான செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

“எனவே, இவ்விடங்களில் இருந்து அதிகமான கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அட்மிரல்டியில் உள்ள ‘அகாசியா’ முதியோர் இல்ல புதிய கிருமித்தொற்று குழுமத்தில் திங்களன்று 14 புதிய தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டதற்கு அங்கு நடத்தப்பட்ட விரிவான பரிசோதனையே காரணம்,” என்று திரு கான் கூறினார்.

அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணியாற்றும், குறிப்பாக கொவிட்-19 பாதிப்பு ஏற்படக்கூடிய மக்களுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கான பரிசோதனைகள் முடுக்கிவிடப்படும் என்று சுகாதார அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்திருந்தது.

இவர்களில் சுகாதாரப் பணியாளர்கள், உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 சம்பவங்களுடன் தொடர்புகொண்ட முதல் நிலையில் பணியாற்றும் அதிகாரிகளும் அடங்குவர்.

தொற்றுநோய் பாதிப்பின் சரியான விகிதாசாரத்தை துல்லியமாக குறிப்பிடுவது கடினம். இது அறிவிக்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கலாம் என்று கொரோனா கிருமியை எதிர்த்துப் போராட அமைக்கப்பட்டுள்ள அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான லாரன்ஸ் வோங் கூறினார்.

“பொதுமக்களிடையே நாம் காணும் இன்றைய தொற்று விகிதம் உண்மையான தொற்று விகிதத்தைவிடக் குறைவாக இருக்கலாம். ஏனெனில், தொடர்புபடுத்தப்படாத சம்பவங்கள், கண்டறியப்படாமல் இருக்கும் தொற்றுகள், சாதாரண இருமல் அல்லது காய்ச்சல் என்று மக்கள் நினைக்கும் லேசான பாதிப்புகள் இருக்கக்கூடும்.

“உலகில் எல்லா இடங்களிலும் காணப்படும் உண்மை நிலவரம் இது. இன்றைய தரவுகளில் காணப்படுவதே நாம் அறிந்தது. ஆனால், இன்னும் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே ஓரளவு முழுமையாக நிலைமையை அறிந்துகொள்ள முடியும். அதைத்தான் அரசாங்கம் செய்ய நினைக்கிறது,” என்று தேசிய வளர்ச்சி அமைச்சருமான லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!